அண்ணா பல்கலையில் 5 ஆண்டு எம்எஸ்சி படிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்எஸ்சி  பட்டப் படிப்பில் சேர இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் என எம்எஸ்சி கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக் மீடியா ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட இந்த படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவ மாணவியர், ஆன்லைன் மூலம் இம்மாதம் 22ம் தேதி முதல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் 27ம் தேதியில் கட்டணம் செலுத்த வேண்டும். ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  www.annauniv.edu/cfa என்ற இணைய தளம் மூலம் சமர்ப்பிப்பதுடன், இந்த  இணைய தளத்தில் இருந்தே கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: