துளித்துளியாய்....

* ஜெர்மனியில் நடக்கும் பேட் ஹோம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று அமெரிக்க வீராங்கனைகள்  ஆன் லி-அமெண்டா அனிஸ்மோவா ஆகியோர் மோதினர். அதில் அமண்டா 6-0, 6-2 என நேர் செட்களில்  வென்று காலிறுதிக்கு முன்னேறினார்,

* இங்கிலாந்து  சென்றுள்ள  இந்திய அணிக்கும், லீசெஸ்டர்ஷையர் அணிக்கும் இடையிலான 4 நாட்கள் பயிற்சி ஆட்டம்  இன்று லீசெஸ்டரில் தொடங்குகிறது.

* ஐசிசி டி20 வீரரகளுக்கான தர வரிசையில் நேற்று மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில்  முதல் 10 இடங்களில் இஷான் கிஷன் 6வது இடத்தில் இருக்கிறார். ராகுல்(15வது இடம்),  ரோகித்(18), ஸ்ரேயாஸ்(19) ஒரு இடம் பின் தங்கி உள்ளனர். அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச டி20யில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 108 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை எட்டியுள்ளார்.

* பந்து வீச்சாளர்கள் பட்டியலில்  முதல் இடங்களிலும், ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியல்களில் முதல் 20 இடங்களிலும்  இந்தியர்கள் யாருமில்லை. பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் ஒரு இடம் பின் தங்கி 17வது இடத்திலும் , சாஹல் 3 இடம் பின்தங்கி 23வது இடத்திலும் இருக்கின்றனர்.

* ஐபிஎல் தொடரின் போது கடினமாக உழைத்த  வான்கடே அரங்க ஊழியர்கள் 48 பேருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தலா ஒரு லட்ச ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க உள்ளது.

Related Stories: