சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் 150 பேர் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தனர்

சித்தூர் : சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சியை  சேர்ந்த முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் 150 பேர் நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு முன்னியில் இணைந்தனர்.சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அப்சல் கான்  தலைமையில் முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் 150 பேர் எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு முன்னிலையில் நேற்று ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தனர். அவர்களுக்கு எம்எல்ஏ கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார்.

பின்னர், எம்எல்ஏ பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ஆந்திர மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அதேபோல் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். முஸ்லிம் மைனாரிட்டி வகுப்பை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அதேபோல் முஸ்லிம் மைனாரிட்டி வகுப்பை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

இது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் செய்து வருகிறார். இதனால் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏராளமான முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். இது மிகவும் வரவேற்க கூடியது. ஏழை எளிய மக்களுக்காகவும் முஸ்லிம் மைனாரிட்டி மக்களுக்காகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களுக்காகவும் பாடுபடும் ஒரே கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. ஆகவே எதிர்க்கட்சியில் இருக்கும் முஸ்லிம் மக்களும் ஆளும் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் முதல்வர் ஜெகன்மோகன் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கி அதன் மூலம் சேர்மன் பதவிகள் வழங்கியுள்ளார். அதேபோல் ஏழை எளிய முஸ்லிம் மைனாரிட்டி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார். அவர்கள் வியாபாரம் செய்து கொள்ள வங்கிகள் மூலம் கடன் வழங்கியுள்ளார். அதேபோல் சிறு குறு தொழில் செய்து கொள்ள கடனுதவி வழங்கியுள்ளார்.

இதனால்தான் எதிர்க்கட்சியில் இருக்கும் மற்றும் இதர கட்சியில் இருக்கும் முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் ஆளும் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: