துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் நேற்று மாற்றங்களை கண்டது. அதன்படி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்ற மிதாலி ராஜ் பெயர் பேட்டிங் தர வரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு முதல் இடத்தில் இருந்த மிதாலி போட்டிகளில் பங்கேற்காததால் கடைசியாக 7வது இடத்தில் இருந்தார். இப்போது முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை ஸ்மிரித மந்தானா. அவர் 8வது இடத்தில் தொடர்கிறார். புதுக் கேப்டன் ஹர்மன்பிரீத் 13வது இடத்தில் உள்ளார். முதல், 3வது இடங்களில் ஆஸி வீராங்கனைகள் அலிஷா, பெத் முனி ஆகியோரும், 2வது இடத்தில் இங்கிலாந்து வீராங்கனை நடாலியாவும் இருக்கின்றனர்.