ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி டிரைவர் கைது

அம்பத்தூர்: செங்குன்றத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை அடுத்த செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் நேற்று குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகராஜ் அறி வுறுத்தல்படி இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகப்படும்படி வந்த லாரியை மடக்கி விசாரித்தனர்.

அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் லாரியை சோதனையிட்டனர். அதில், 80 மூட்டைகளில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரி டிரைவரை பட்டரைவாக்கம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, நெமிலிச்சேரியை சேர்ந்த ஹரிஹரன் (26) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து லாரியுடன் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில், செங்குன்றம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும், பொதுமக்களிடமும் ரேஷன் அரிசி வாங்கி ஆந்திராவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிஹரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: