முதல் முறையாக கொலம்பியாவில் இடதுசாரி ஆட்சி

பொகோடா: கொலம்பியாவில் முதல் முறையாக இடதுசாரி கட்சியை சேர்ந்த முன்னாள் கிளர்ச்சியாளர் கஸ்டவோ பெட்ரோ வெற்றி பெற்றுள்ளார்.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அங்கு கடந்த மாதம் அதிபர் தோ்தல் நடைபெற்றது. இதில், இடதுசாரி கட்சியை சோ்ந்த கஸ்டாவோ பெட்ரோ, ரியல் எஸ்டேட் அதிபர் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில், 50.48 சதவீத வாக்குகளுடன் கஸ்டாவோ வெற்றி பெற்றுள்ளார். ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தாா்.

இதன் மூலம் புதிய அதிபராக கஸ்டாவோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் முதல் முறையாக கொலம்பியாவில் இடதுசாரி ஆட்சி நடைபெற உள்ளது. மேலும் கஸ்டாவோ, அந்நாட்டின் முன்னாள் கிளா்ச்சியாளா் குழுவில் இணைந்து செயல்பட்டவர். இதற்காக அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு பின் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. தேர்தல் வெற்றிக்குப் பின் பேசிய கஸ்டாவோ, ஆயுதம் ஏந்தியவர்களையும், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்பேன் என தெரிவித்தார்.

Related Stories: