மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதன்முறையாக கணினி வழி தேர்வு

சென்னை: டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடந்தது. இதில், 16 பதவிக்கான தேர்வை 3,519 பேர் எழுதினர். டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் சீர்திருத்த பள்ளிகள்  மற்றும் ஒழுக்கக் கண்காணிப்பு பணிகள் அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவியில் காலியாக உள்ள 16 இடங்களுக்கான தேர்வை நேற்று நடத்தியது.  3 ஆயிரத்து 539 பேர் தேர்வு எழுதினர். டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே  முதல் முறையாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வை கணினி வழியில் நடத்தியது. காலை 9.30 மணி , பிற்பகல் 2 மணி என 2 தாளுக்கான தேர்வுகள் நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. ஏற்கனவே அரசு துறை சார்ந்த தேர்வுகள் கணினி வழியில் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. தற்போது முதல் முறையாக நேரடி தேர்வுகளிலும் கணினி வழி தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது  பின்வரும் காலங்களில் அனைத்து தேர்வுகளுக்கும் விரிவுப்படுத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

Related Stories: