மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி கடலில் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்கிறோம்

சென்னை: கடலில் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பாக5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்கிறோம் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மின் நுகர்வோர் சேவை மையமான ‘மின்னகம்’ திறந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நேரடியாக ஆய்வு செய்து துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:

 முதல்வரின் சிறப்பு திட்டமாக மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்ட மின்னகத்தின் மூலம் 9,16,000 புகார்கள் வரப்பெற்று இருக்கின்றன. இதில் 9,11,000 புகார்களுக்கு, குறிப்பாக, 99.45 விழுக்காடு புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகள் காணப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆப் மூலமாக புகார்களை தெரிவிக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 ஒன்றிய அரசை பொறுத்தவரை எரிசக்தி துறை மூலமாகவோ நிலக்கரி துறை மூலமாக நமக்கு தேவையான அளவிற்கு 21.92 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும் என்று கடிதம் வரப்பெற்றுள்ளது. கடிதம் வருவதற்கு முன்பாகவே முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெண்டர் கோரப்பட்டு இறக்குமதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த விலையில் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடலில் காற்றாலை மின் உற்பத்தி சம்மந்தமாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: