பெண்களுக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா?.. சாய் பல்லவியை ட்ரோல் செய்வதை நிறுத்த வேண்டும்: நடிகை திவ்யா ட்வீட்

சென்னை: காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தொடர்பாக நடிகை சாய் பல்லவி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சாய் பல்லவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நான் நடுநிலையான சூழலில் வளர்ந்தேன். இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள். கொரோனா லாக்டவுன் காலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை கும்பல் ஒன்று முஸ்லிம் என்று சந்தேகித்து அவரை அடித்துக் கொன்றது. மேலும், அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுமாறு கோஷமிடச் செய்தனர். இதற்கும் காஷ்மீரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சாய் பல்லவியில் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் சாய் பல்லவிக்கு நடிகை திவ்யா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சாய் பல்லவிக்கு எதிரான மிரட்டல்களை நிறுத்த வேண்டும். பெண்களுக்கு மட்டும் கருத்து சொல்ல உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பிய அவர், நல்ல மனிதனாக இருங்கள் என்று யாரவது சொன்னால் அவர் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் எனவும், வெறுப்பை உமிழ்ப்பவர்களும் உண்மையான ஹீரோக்கள் என பாராட்டப்படுகிறார்கள் எனவும் திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டியுள்ளார்.

Related Stories: