திருப்பாச்சூர் பெரிய காலனியில் பகுதி நேர நியாய விலை கடை: வி.ஜி ராஜேந்திரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனியில் பொதுமக்களின் வசதிக்காக பகுதி நேர நியாய விலை கடையை திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, முக்கிய பகுதியில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. ஆனால் கிராமத்தின் எல்லை பகுதியான பெரிய காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அவர்கள், 2 கிமீ தூரம் நடந்து வந்து நியாய விலை கடையில் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் இருந்துவந்தது. இதனால் கலெக்டர் மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனுக்கு பொதுமக்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர். அதை ஏற்று பகுதி நேர நியாய விலை கடை ஏற்படுத்தி வாகனம் மூலம் உணவு பொருட்களைக் கொண்டு வந்து வாரத்தில் 3 நாட்களில் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து திருப்பாச்சூர் பெரிய காலனியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகில் வாகனம் மூலம் கொண்டு வந்த உணவு பொருட்களை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘ரேஷன் பொருட்கள் வழங்க தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய நியாய விலை கடை அமைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

 நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தா.கிருஷ்டி, மாவட்ட நிர்வாகிகள் ஐ.ஏ.மகிமைதாஸ், பா.சிட்டிபாபு, தா.மோதிலால், ஒன்றிய கவுன்சிலர் மஞ்சு லிங்கேஷ் குமார்,‌ கலையரசன், மோகனா ராஜரத்தினம், பூங்கோதை, பாசூரான், சந்திரன், சிலம்பரசன், மாரி, பிரேம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: