சென்னை - மதுரை தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது :தெற்கு ரயில்வே திட்டவட்டம்

சென்னை : சென்னை - மதுரை தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று தெற்கு ரயில்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் சொகுசு பயணம் செய்யும் வகையில் தேஜஸ் ரயில் கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த ரயிலில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கைகள் காலியாகவே இயங்கி வருகின்றன.இதனால் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நிற்கும் இந்த ரயிலை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரயில்வே வாரியம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கப்படுமா, 2019 முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் வரை மாதந்தோறும் எவ்வளவு இடங்கள் நிரம்பின என்பது உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே அமைச்சகம், சென்னை - மதுரை தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நிறுத்தப்பட்டால் 8 முதல் 10 நிமிடங்கள் கால தாமதம் ஏற்படும். தேஜஸ் ரயிலில் சுமார் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கைகள் காலியாகவே இயங்கி வருகின்றன. இதனால் தேஜஸ் ரயில் இயக்கப்பட்ட 19 மாதங்களில் இதுவரை சுமார் ரூ.18 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Related Stories: