பிரான்சில் தொடங்கிய நவீன தொழில்நுட்ப கண்காட்சி: பார்வையாளர்களை கவரும் பறக்கும் டாக்ஸி..!!

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தொடங்கியுள்ள நவீன தொழில்நுட்ப கண்காட்சியில் ஜெர்மனியின் டிரோன் டாக்ஸி ஒன்று ஏராளமானோரின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான வெலோகாப்டர் இந்த டிரோன் டாக்ஸியை வடிவமைத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பறக்கும் டாக்ஸி வடிவமைக்கப்பட்ட போதும் தற்போது தான் அதன் கட்டமைப்பு முழுமை பெற்றுள்ளதாக வெலோகாப்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அரங்கிற்கு வரும் அனைத்து தொழில்நுட்ப நிபுணர்களும் டிரோன் டாக்ஸியில் ஏறி சோதனையிட்டு வருகின்றனர்.

தற்போது டிரோன் டாக்ஸி பறக்க தயாராக உள்ள நிலையில், இதற்கான உரிமங்களை பெற பல்வேறு நாடுகளில் முயற்சி செய்து வருவதாக வெலோகாப்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் விரைவில் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் கண்காட்சியில் பறக்கும் டாக்ஸி தவிர பல்வேறு நவீன தொழில்நுட்ப கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

Related Stories: