மூதாட்டிகளிடம் நகை பறிப்பு: ஆசாமி சிக்கினார்

அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பதாக அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்படி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதன்படி அம்பத்தூர் கள்ளிக்குப்பம் செக்போஸ்ட் அருகே நடைபெற்ற நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் கொரட்டூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 28வது தெருவை சேர்ந்த சசிகுமார்(41) என்பதும், இவர் அதே பகுதியில் ஆயில் கடை நடத்தி வந்தததும் தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களாக வருமானம் இல்லாததால் செயின் பறிப்பில் ஈடுபட முடிவு செய்தார். அதன்படி கடந்த 23ம் தேதி காலை 4.30 மணி அளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 1/2 சவரன் செயின் பறித்துள்ளார். அதன் பிறகு ஜூன் 1ம் தேதி தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 சவரன் நகையை பறித்தது மட்டுமில்லாமல் கடந்த 6ம் தேதி பானு நகர் 3வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 1/2 சவரன் நகையை பறித்து சென்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: