கோவை அருகே வனத்துறை அதிகாரியை ஆக்ரோஷமாக தாக்கிய யானை: போக்குக்காட்டிய ஒற்றை யானையை பிடிக்க அதிகாரிகள் தீவிரம்..!

கோவை: கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வன கே=ஊழியரை ஆக்ரோஷமாக மிதித்து தாக்கிய காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயாசாமி மலையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியேறிய 6 யானைகள் பேரூர் அடுத்த தீட்சிப்பாளையம் கிராமத்தில் முகாமிட்டன. குடைத்தோட்டம் அருகே உள்ள தாமோதரன் வீட்டிற்கு சொந்தமான நிலத்திற்குள் புகுந்த யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தியதுடன் அவரது வீட்டு கதவை உடைத்து பாத்திரங்களை உடைத்தன. மேலும் வீட்டிற்குள் இருந்த தின்பண்டங்களையும் சூறையாடின.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானை கூட்டத்தின் நகர்வுகளை கண்காணித்தனர். ஆனால் அதற்குள் 5 யானைகள் வனத்திற்குள் சென்றுவிட்ட நிலையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை புதருக்குள் ஒழிந்து கொண்டு வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. திடீரென புதரில் இருந்து ஆக்ரோஷமாக வெளியேறிய யானை தன்னை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த வேட்டை தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகராஜை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: