பவுர்ணமி தினத்தையொட்டி மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை: அமைச்சர் அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

குன்றத்தூர்: மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பவுர்ணமி நாளான நேற்று 108 திருவிளக்கு பூஜையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள மாங்காடு காமாட்சி அம்மன், தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன், சமயபுரம் மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், மேல்மலையனூர் அங்காளம்மன், சென்னை காளிகாம்பாள் கோயில் உள்பட 12 கோயில்களில் பௌர்ணமி தினமான நேற்று 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் ஒரு கட்டமாக, பௌர்ணமி தினமான நேற்று மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து, இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காமாட்சி விளக்கு, பூ, குங்குமம், தேங்காய், பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா, ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையாளர் கவெனிதா மற்றும் கோயில் தர்மகர்த்தா மணலி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: