கருங்குழி பேரூராட்சியில் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாராயணபூஜை: ஓம் நமசிவாய மந்திரத்துடன் அபிஷேகம்: அன்னதானம் வழங்கப்பட்டது

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில்,  ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் சத்யநாராயணபூஜை நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி உள்ளது. இங்குள்ள  ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் வைகாசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு  கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தம சுவாமிகள் பக்தர்களை சந்திப்பார். அதன்படி, 97வது பௌர்ணமி தரிசனம் நேற்று செவ்வாய்கிழமை பௌர்ணமி தினத்தன்று நடந்தது. அப்போது, பக்தர்கள் அனைவருக்கும் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை, சித்தர் நல்லாசி வழங்கினார். இதில், காலை 11 மணி முதல் 12 மணிவரை சேஷபீடத்தில் தியானம் நடந்தது.

 இதில்,  அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசி பெற்றனர். அதனை தொடர்ந்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது.  ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாராயண பூஜையும் செய்து, மகாதீப ஆராதனையை சித்தர் ரகோத்தம சுவாமிகள், பக்தர்களுக்கு காண்பித்தார்.இவ்விழாவில், கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுசேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். சித்தரிடம் ஆசிபெற்று சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: