விராலிமலை முருகன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.   விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விராலிமலை தெற்கு தெருவில் உள்ள தெப்பக் குளக்கரையில் நேற்றிரவு நடந்தது.

வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பம் குளத்தில் 3 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  அதன்பின்னர் மயில் வாகனத்தில்  நான்கு ரத வீதிகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

Related Stories: