வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ தோற்றுவிப்பு

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’  தோற்றுவிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் கூறியதாவது:

கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.5.00 இலட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்”     

மேற்கண்ட அறிவிப்பின்படி புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ‘‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது” க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பப்  படிவம்  தமிழ்  வளர்ச்சித்  துறையின்  www.tamilvalarchithurai.com  என்ற  வலைத்தளத்தில் ‘விருது  விண்ணப்பம்‘ என்ற பகுதியில்  விலையின்றி பதிவிறக்கம்  செய்து  கொள்ளலாம்.  

விண்ணப்பிப்பவர்கள்  தன்விவரக்  குறிப்பு, நிழற்படம் இரண்டு கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு பங்காற்றிய விவரங்களுடன் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு 24.06.2022ஆம்  நாளுக்குள்  அனுப்ப  வேண்டும். என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: