கடலூர்: கடலூர் அடுத்த வடுகபாளையம் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. கடலூர் அடுத்த ஏ.வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்,சுப்புராயலு மற்றும் வரலட்சுமி இவர்களது 3 கூரை வீடுகள் அடுத்தடுத்து உள்ளது.இந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் இன்று வேலைக்கு சென்றனர்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வரலட்சுமி என்பவரது வீட்டில் திடீரென தீ பற்றி மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது உள்ளது.அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து,உடனடியாக முதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
