சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் எத்தனை என்ற விவரத்தை நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் சித்ரா தெரிவித்துள்ளார்.
காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் காலியான செவிலியர் பணியிடங்கள் எத்தனை உள்ளது என்பதை நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவ கல்லூரி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்ககம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்ககம் ஆகிவற்றுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் சித்ரா கடிதம் அனுப்பியுள்ளார்.
