செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல் நாத் விடுத்துள்ள அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு அடுத்த வண்டலூர் தாலுகாவில் முருகமங்கலம் 1260 குடியிருப்புகள், கீரப்பாக்கம் 1760 குடியிருப்புகள், தாம்பரம் மாநகராட்சியில் அன்னை அஞ்சுகம் நகர் 192 மற்றும் பெரும்பாக்கம் 4284அடுக்குமாடி வீடுகள் கட்டி முடியும் தருவாயில் உள்ளது. பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும். மேலும் பயனாளிகள்அரசின் மானிய தொகை போக மீதி பங்குத் தொகையை செலுத்துவதற்கு விருப்பம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
