ஜூலையில் மகேஷ் பாபு படத்தின் ஷூட்டிங்

ஐதராபாத்: மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க உள்ளது.மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படம் கடந்த மாதம் வெளியாகி வெற்றிபெற்றது. இந்நிலையில், விடுமுறையை கொண்டாட மகேஷ் பாபு தனது குடும்பத்தாருடன் ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார். அவரது அடுத்த படத்தை திரி விக்ரம் இயக்குகிறார். ஏற்கனவே திரி விக்ரம் இயக்கத்தில் கலேஜா படத்தில் மகேஷ் பாபு நடித்திருந்தார். இந்நிலையில், இப்போது அவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை மகேஷ் பாபுவிடம் சொல்வதற்காக திரி  விக்ரம் ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அவர்கள் திரும்பியதும் ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மகரிஷி படத்துக்கு பிறகு இருவரும் ஜோடி சேருகிறார்கள். இப்படத்துக்கு தமன் இசை அமைக்கிறார்.

Related Stories: