திருவொற்றியூர் அருகே சரக்கு பெட்டகத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான உளுந்தம் பருப்பு மூட்டைகள் திருட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே கரிமேடு பகுதியில் கான்கார்டு சரக்கு பெட்டகம் உள்ளது. இங்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கன்டெய்னர் பெட்டியில் அடைக்கப்பட்ட பொருட்கள் கப்பல் மூலம் பொருட்கள் கொண்டுவரப்பட்டு இங்கிருந்து டிரைலர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. சென்னையை சேர்ந்த தனியார் கார்கோ நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சுமார் 23 ஆயிரத்து 830 கிலோ எடைகொண்ட உளுந்தம் பருப்பு மூட்டைகளை கன்டெய்னரில் அடைத்து கப்பல் மூலம் கரிமேடு கான்கார்டு சரக்கு பெட்டகத்திற்கு அனுப்பி வைத்தது.

இதனைத்தொடர்ந்து அந்த கன்டெய்னர், டிரைலர் லாரியில் ஏற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காகதயார் நிலையில் இருந்தது. இந்நிலையில், மர்ம நபர்கள் சில தினங்களுக்கு முன் இந்த கன்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதிலிருந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 2,300 கிலோ உளுந்தம் பருப்பு மூட்டைகள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இதுதொடர்பாக சரக்கு பெட்டக  பொறுப்பாளர் ராம்குமார் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு கான்கார்டு சரக்கு பெட்டகத்தில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: