சங்கரன்கோவிலில் வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம்

சங்கரன்கோவில் : சங்கரன்கோவிலில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரயில்வே கேட் சேதமானது. தொடர்ந்து 2 ரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் அமைந்துள்ள ரயில்வே கிராசிங்கில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மேற்கு பக்கம் உள்ள ரயில்வே கேட் சேதமடைந்தது.

நேற்று காலை 8 மணிக்குள் 4 ரயில்கள் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தை கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில்வே போலீசார் ரயில்வே கேட் பகுதிக்கு வந்து செயின்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ரயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில்வே கேட்டை சேதப்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே கேட் சேதமான நிலையில் மதுரை பயணிகள் ரயில், தாம்பரம்-நெல்லை வரை செல்லும் அதிவிரைவு ரயில் ஆகிய 2 ரயில்களும் ஒரேநேரத்தில் வந்ததால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில்வே கேட் சேதமான நிலையில் செங்கலை வைத்து தடுப்பது வாகன போக்குவரத்தை சரி செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: