வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள் கட்டணங்கள் செலுத்தி கிரயப்பத்திரம் பெறலாம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை: ‘வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றோர் மாதாந்திர தவணை தொகை மற்றும் இதர கட்டணங்கள் செலுத்தி கிரயப்பத்திரம் பெற்று கொள்ளலாம்’ என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு வீட்டு வசதி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற்றுள்ள வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றோர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகை மற்றும் இதர கட்டணங்கள் செலுத்தி வாரிய விதிமுறைகளின்படி கிரயப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம். இச்செயல்முறையை எளிமையாக்க வாரியம் மூலம் முழுத்தவணைத் தொகையை செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு வரைவு கிரயப்பத்திரம் ஒதுக்கீடுதாரர்களின் வீட்டு முகவரியில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கிரயப்பத்திரம் வழங்க மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இச்சிறப்பு முகாம் மூலமாக ஒதுக்கீடுதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் கிரயப்பத்திரம் பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: