ஊட்டி அருகே மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

ஊட்டி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இதனை ஒட்டியே  ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நீலகிரிக்கு வந்துள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு சென்றார். பள்ளி மற்றும் விடுதிகளை பார்வையிட்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

Related Stories: