காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்!: 5 அமைச்சர்கள், 7 மாவட்ட ஆட்சியர்கள், துறை அதிகாரிகள் பங்கேற்பு..!!

தஞ்சை: காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து 5 அமைச்சர்கள், 7 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்ற விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்களும் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர் கடன் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்தார். நீர்நிலைகளை தூர்வார உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் குறுவை நெல் சாகுபடி இரட்டிப்பாகும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆண்டை விட குறுவையில் 5.2 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Stories: