சிதம்பரம் முத்தையா நகரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கும்பாபிஷேகம்: புனித நீரை ஊற்றி பங்காரு அடிகளார் செய்து வைத்தார்

மதுராந்தகம்: சிதம்பரம் முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தினை செய்து வைத்தார்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைப்பதற்காக மேல்மருவத்தூரில் இருந்து சிதம்பரம் சென்றார். பங்காரு அடிகளாருக்கு வழிநெடுகிலும் செவ்வாடை பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு சிதம்பரம் முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தை சென்றடைந்தார். அங்கு, பங்காரு அடிகளாருக்கு கடலூர் மாவட்டம், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பாக இயக்க நிர்வாகிகள் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.மேலும், பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கோபுர கலசத்திற்கு வேள்வியில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித  நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்து தீப ஆராதனை காட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

சித்தர் பீட கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் சிலைக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து 108 மூலமந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டி பூஜை செய்தார். குடமுழுக்கு விழாவில், ஆன்மிக இயக்கத் துணை தலைவர் தேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் உள்பட கடலூர், சிதம்பரம், சென்னை, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கடலூர் மாவட்ட தலைவர் கிருபானந்தன், துணை தலைவர் முருகு வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஜெயபால், வேள்வி குழு தலைவர் கோவிந்தராஜ், மகளிர் அணி தலைவி சீதா லட்சுமி, தணிகை குழு கணபதி, கூடுதல் செயலாளர் பார்த்த சாரதி உள்பட செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர்.

Related Stories: