முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி: முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி வழங்கினார்

திருக்கழுக்குன்றம்:முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு  திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்  பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி இணை இயக்குனர் வில்லியம்ஸ் ஜேசுதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், துணைதலைவர் அருள்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில், சிறப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி பேரூராட்சியின் ஒப்பந்த அடிப்படையிலான  தூய்மை பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, சீருடை ஆகியவைகளை  வழங்கினார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, பழனி, தௌலத் பீ , தேன்மொழி இளங்கோ மற்றும் திமுக நிர்வாகிகள் விஜயன், செங்குட்டுவன், எம்.கே.தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.    

Related Stories: