சென்னை ஐஐடி சமூகநீதியை மறுப்பதா? ராமதாஸ் கேள்வி

சென்னை: சென்னை ஐஐடியில் சமூக நீதியை மறுப்பது ஏன் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐஐடிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவற்றில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசும் ஐஐடிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஐஐடி நிர்வாகங்கள் அதை மதிக்க மறுக்கின்றன. இந்த அநீதி அகற்றப்படும் வரை ஐ.ஐ.டிகளில் சமூக நீதியை வளர்க்க முடியாது என்பதே உண்மை. சென்னை ஐஐடியில் இப்போது நிரப்பப்படாத 25 பணியிடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பின்னடைவு பணியிடங்களும் அடையாளம் காணப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: