சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை ரகசியமாக அனுப்பிய அதிகாரிகள்?கைது செய்ய வந்த சிவகங்கை தனிப்படையினர் அதிர்ச்சி

சேலம்: சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை, சிறை அதிகாரிகள் ஷட்டரை திறந்து ரகசியமாக வெளியே அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஜாமீனில் வெளியே செல்லும் கைதிகளின் பின்புலம் குறித்து உளவுப்பிரிவினர் ரகசியமாக கண்காணிப்பார்கள். ரவுடியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியே செல்லும்போது அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் வாரன்ட் இருந்தால் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கைது செய்வார்கள். அதே  போல தொடர்ந்து திருட்டு வழக்கில் ஈடுபடும் நபர்களையும் இவ்வாறு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள்.

இவ்வாறு வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவகங்கை மாவட்டம் சிவகாஞ்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது வாரன்ட் இருப்பதையடுத்து தனிப்படையினர் அவரை கைது செய்ய 3 நாட்களுக்கு முன்பே சேலம் மத்திய சிறைக்கு வந்தனர். வழக்கமாக சிறையின் நுழைவாயில் அருகில் உள்ள மரத்தடியில் நிற்பார்கள். உள்ளே இருந்து வெளியே வரும்போது அவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி தனிப்படையினர் ரவுடிக்காக காத்திருந்தனர்.அப்போது சிறை அதிகாரி ஒருவர், அங்கிருந்த தனிப்படையினரிடம், இங்கு வைத்து யாரையும் கைது செய்யக்கூடாது, ரோட்டுக்கு வெளியே நில்லுங்கள்  என்று கூறி அனுப்பினார். இதையடுத்து போலீசாரும் ரோட்டுக்கு வெளியே காத்திருந்தனர். காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை காத்திருந்தும் ஒரே ஒரு முதியவர் மட்டுமே சிறையிலிருந்து வெளியே வந்தார்.

Related Stories: