மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது பாஜ: பிருந்தா கரத் பேச்சு

சென்னை: சிறுபான்மை மக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்தி நிறுத்தி பாதுகாப்பு வழங்கவும், அரசியலமைப்பு சட்டப்படி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா கரத் பேசியதாவது:பாஜவின் செய்தி தொடர்பாளராக உள்ள ஒரு பெண்மணி ‘எனக்கு சில மிரட்டல்கள் வந்தது. மிரட்டல்கள் வந்ததும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு ஆதரவு வந்தது என கூறியுள்ளார். இதேபோல், பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் எனக்கு ஆதரவு வந்துள்ளது என கூறியுள்ளார். இதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பாஜ இதற்கும் எங்களுக்கும் பொறுப்பு அல்ல என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெறுப்பு அரசியலில் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜ ஆட்சியாளர்கள் தான் இதற்கு காரணம். வெறுப்பு பேச்சின் பாதுகாவலர்களாக இன்று செயல்பட்டு வருகிறார்கள்.  நாம் வேலை வேண்டும் என கேட்கிறோம். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த போராடி வருகிறோம். ஆனால், ஒன்றிய அரசு அனைத்து துறைகளிலும் படுமோசமான தோல்வியை அடைந்துள்ளது. மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து வருகிறார்கள். மக்களை பிரிக்கும் பிரச்னைகளை தான் உற்பத்தி செய்கிறார்கள். மக்களின் அடிப்படை பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை. இவ்வாறு பேசினார்.

Related Stories: