கருங்குழி பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழா: பேரூராட்சி தலைவர் தசரதன் துவக்கி வைத்தார்

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சி சார்பில் நகரங்களின்  தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா, பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சங்கீதாசங்கர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் அனைவரையும் வரவேற்றார். இதில், பேரூராட்சி தலைவர் தசரதன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மண் வளத்தை காப்போம், மரம் வளர்ப்போம் இயற்கையை காப்போம் உள்ளிட்ட வாசகங்களை, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர், கையில் பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழாவின் தொடர்ச்சியாக, அரசின் வழிக்காட்டுதல் படி 4வது வார்டு பகுதியில் உள்ள செட்டிக்குளத்தில் படர்ந்திருந்த ஆகாயதாமரை செடி கொடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றை அகற்றினர். பேரூராட்சி தலைவர் தசரதன், செயல் அலுவலர் கேசவன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories: