பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு விடுதி மாணவர்களுக்கு புதிய உணவு பட்டியல்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் வளாகத்தில் இயங்கி வரும் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திருத்தம் செய்யப்பட்ட உணவு பட்டியலின்படி மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதில் துறையின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் கீழ் 1354 கல்வி விடுதிகள் இயங்கி வருகின்றன. விடுதிகளில் 86,514 மாணவ, மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். விடுதி மாணவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் வாராந்திர உணவுப்பட்டியல் பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது, 18 ஆண்டுகளுக்குப் பின்  கலைஞர் பிறந்த நாளான நேற்று முதல் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும்  மாணவ, மாணவியருக்கு திருத்தம் செய்யப்பட்ட உணவுப்பட்டியலின்படி புதிய உணவு வழங்கப்பட உள்ளது.

Related Stories: