திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம்: திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குளத்துப்பட்டி அந்தரநாச்சி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் பந்தய தூரம் போய் வர 8 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 6 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையை முதல் பரிசை குளத்துப்பட்டி சாமி சுரேஷ், 2ம் பரிசு அறந்தாங்கி தினேஷ் கார்த்தி, 3ம் பரிசு பரளி கணேசன், 4ம் பரிசு உஞ்சனை உமாதேவி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பந்தய தூரம் போய் வர 6 மைல் தூரம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் முதல் பரிசு குளத்துப்பட்டி அழகு சிதம்பரம், 2ம் புதுப்பட்டி கலை, 3ம் பரிசு உஞ்சனை உமாதேவி, 4ம் பரிசு கண்டதேவி மருது பிரதர்ஸ் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற திருமயம்-புதுக்கோட்டை பைபாஸ் சாலையில் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

Related Stories: