தமிழகம் முழுவதும் 15 டிஎஸ்பிக்கள் கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 15 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:  கன்னியாகுமரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த பிச்சை விருதுநகர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 6வது பிரிவு பட்டாலியன் உதவி கமாண்டன்டாக இருந்த ரவிச்சந்திரன் வேலூர் மாவட்டம் தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக இருந்த லோகநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும்,

கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி திருப்பத்தூர் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த வீரமணி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பியாகவும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த செங்கமலக்கண்ணன் சென்னை க்யூ பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த லயோலா இக்னேஷியஸ் தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருநெல்வேலி நகர மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த ராஜ்குமார் ராணிப்பேட்டை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சென்னை மாநகர குற்ற ஆவண காப்பகம் உதவி கமிஷனராக இருந்த ராஜசேகரன் பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 8வது பட்டாலியன் துணை கமாண்டன்டாகவும், சென்னை சீருடைப்பணியாளர் தேர்வாணயம் டிஎஸ்பியாக இருந்த அரசு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் கூடுதல் எஸ்பியாகவும், சென்னை பாதுகாப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாக இருந்த கிருஷ்ணராஜ் சென்னை பிரிவு-1 சிறப்பு பிரிவு, எஸ்பிசிஐடி கூடுதல் எஸ்பியாகவும், சேலம் மாவட்டம் வாழப்பாடி டிஎஸ்பியாக இருந்த முத்துசாமி வேலூர் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், திருநெல்வேலி நகர ஒருங்கிணைந்த குற்றம் மற்றும் சிபிசிஐடி டிஎஸ்பியாக இருந்த பீர் மொஹிதீன் மதுரை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், தென்காசி மாவட்டம் குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக இருந்த சார்லஸ் கலைமணி தென்காசி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், மதுரை மாவட்டம் குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பியாக இருந்த மோகன் தம்பிராஜன் வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 15 பட்டாலியன் கூடுதல் துணை கமாண்டன்டாகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: