2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்ட மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில்..!!

மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மதுரை-ராமேஸ்வரம் காலை நேர பாசஞ்சர், ராமேஸ்வரம்-மதுரை மாலை நேர பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குவதாக மதுரை ரயில்வே கோட்ட அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ரயில்கள் இயக்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு வழித்தள ரயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு உட்பட 16 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து முதல் ரயில் புறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் மதுரை-ராமேஸ்வரம் ரயில் இயக்கபடுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: