தமிழ்நாடு சுற்றுலா வளரச்சி கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் 3டி அனிமேஷன் மேப்பிங் திட்டத்துக்கு ரூ.5 கோடி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் செதுக்கிய சின்னங்களை கண்டு ரசிக்க ஆண்டு தோறும் பல லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 3டி அனிமேஷன் திட்டம் செயல்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதையொட்டி, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகிய சின்னங்களை தனியார் நிறுவன ஊழியர்கள் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெற்று 360 டிகிரி சுழலும் கேமராவில் 3டி வீடியோ பதிவு செய்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறுகையில், மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 3டி அனிமேஷன் திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புராதன சின்னங்களை 3டி வீடியோ எடுத்துள்ளோம். அந்த வீடியோவை டெல்லியில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன், சினிமா தியேட்டரில் பார்ப்பது போன்று புராஜக்டர் மூலம் 3டி வீடியோவை 20 நிமிடங்கள் காண்பித்து, புராதன சின்னங்கள் எந்த காலத்தில், எந்த மன்னரால் உருவாக்கப்பட்டது என்பது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு தெளிவாக விளக்கி கூறப்படும். இதனை, இரவு நேரத்தில் மட்டுமே கண்டு களிக்க முடியும் என்றார்.

Related Stories: