லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

லே: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். லடாக்கில் பேருந்து விபத்திற்குள்ளானதில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றி சென்ற வாகனம் லடாக் அருகே சாலையில் இருந்து தடுமாறி ஷீயாக் நதியில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரி கூறுகையில் பர்தாபூர் முகாமிலிருந்து 26 வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனம் ஒஹனிப் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்து ஷீயாக் நதியில் 50 அடி ஆழத்தில் விழுந்ததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த வீரர்கள் பர்தாபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: