ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற 45 வயதான மீனவ பெண் பலாத்காரம் செய்து, எரித்து கொலை : ஒடிசாவை சேர்ந்த 2 பேர் கைது!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின், 45 வயதான மனைவி, கடல்பாசி சேகரிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில்,  மாலை வரை வீடு திரும்பாததால் அச்சமடைந்த கணவரும் அவரது உறவினர்களும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதனிடையே வடகாடு நரிக்குழி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் இறால் பண்ணையில் வேலை செய்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மீது சந்தேகம் உள்ளதாக, கடல்பாசி சேகரிக்க செல்லும் பெண்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த இறால் பண்ணை உள்ள பகுதிக்கு அருகிலுள்ள முள் காட்டிற்குள் சென்று போலீசார், பொதுமக்கள் தேடி பார்த்தனர்.

அங்கு காணாமல் போன பெண் பெண்ணின் உடல் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், நிர்வாண நிலையில் கிடந்தது. அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, தீவைத்து எரித்திருப்பது தெரியவந்தது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த இறால் பண்ணைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து, உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த ஒடிசா ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் போலீசார் அங்கிருந்த ஒடிசா இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 ஊழியர்களை மீட்டு தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். இதில், காலை பண்ணையில் இருந்து வெளியே வந்த இவர்கள் 7 பேரும், பகல் 1 மணிக்கு மேல்தான் பணிக்கு திரும்பியதும், ஒடிசாவுக்கு ரயிலில் செல்வதற்காக அவசர அவசரமாக மாலையில் 6 பேர் டிக்கெட் முன்பதிவு செய்ததும் தெரிந்தது.

இச்சம்பவத்தில் ஒடிசா இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 பேரையும் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக 6 பேரிடம் விசாரித்த நிலையில் இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் மீனவர் சமூக பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இராமேஸ்வரம் வடகாடு மக்கள் சாலை மறியல் செய்த  நிலையில் பெயர் குறிப்பிடாமல் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: