பைக் மீது லாரி மோதி மனைவி பரிதாப பலி

புழல்:  புழல் கண்ணப்பசாமி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் அருண்குமார். கேட்டரிங் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூஜா(30), மதனாங்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். பூஜா நேற்று மாலை பணி முடித்துவிட்டு தனது கணவருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, புழல் காவல் நிலையம் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது, மாதவரத்திலிருந்து செங்குன்றம் நோக்கி வந்த லாரி பைக்கின் பின்புறத்தில்  வேகமாக  மோதியது. இதில் பூஜா தூக்கிவீசப்பட்டு கணவன் கண்முன் சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

Related Stories: