ஆடல் - பாடலுக்கு ஏன் அனுமதி மறுப்பு?: எஸ்பிகள் விளக்கம் அளிக்க உத்தரவு

மதுரை:  ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு உரிய காரணங்களை இன்றி ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பது குறித்து மாவட்ட எஸ்பிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பதை எதிர்த்தும்,  அனுமதி கோரியும் பல்வேறு மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘உரிய காரணங்கள் இன்றி  போலீசார் ஏன் அனுமதி மறுக்கின்றனர்’’ என கேள்வி எழுப்பினார்.  பின்னர், தூத்துக்குடி, தென்காசி, திருச்சி மாவட்ட எஸ்பிகளும்,  மணப்பாறை டிஎஸ்பியும் இன்று (மே 26) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: