சென்னையில் ஜூன் 3ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: சென்னையில் ஜூன் 3ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் கழக தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.

கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: