கஞ்சா தடுப்பு வேட்டையில் 20,000 பேர் கைது: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: கஞ்சா தடுப்பு வேட்டையில் 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறினார். சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் சிறப்பாக செயல் புரிந்த உதவி ஆணையர்கள், சட்டம் -ஒழுங்கு குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறை தனிப்படை போலீசார் உள்ளிட்டோருக்கு வெகுமதி, நற்சான்று வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பேசியதாவது:ஆவடி காவல் ஆணையரகத்தில் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் கலவரத்தை எளிதாக கட்டுப்படுத்த கையாளும் தற்காப்பு ஆயுதங்கள் ரப்பர் குண்டு துப்பாக்கி, எலக்ட்ரிக் ஷாக், லத்தி, பிரத்யேக எலக்ட்ரிக் ஷாக் தடுப்பான் போன்றவை மூலம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு அதிகரிக்கும்.

குடிபோதையில் காவலர்களை தாக்குதல் நடத்துவதாலும் தகராறில் ஈடுபடுவதாலும் திரும்ப லத்தியால் தாக்குவதால்தான் லாக்கப் மரணங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க முடியும். கஞ்சா தடுப்பு வேட்டை 1.0 மற்றும் 2.0வில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் மீண்டும் கஞ்சா தொழிலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: