ராயப்பேட்டை ரவுடி சிறையில் அடைப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை ஜெ.ஜெ.கான் 2வது தெருவை சேர்ந்தவர் கான்பாஷா(33). ஐஸ்அவுஸ் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உட்பட 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலைவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் முன்பு இனி நான் எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று ஓராண்டு கால நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தை மீறி கடந்த 7ம் தேதி ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த முகமது ஜகூர் என்பவரை தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதுகுறித்து முகமது ஜகூர் அளித்த புகாரின் படி ஐஸ்அவுஸ் போலீசார் ரவுடி கான்பாஷைாவை கைது செய்தனர். பின்னர் ஓராண்டு நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக செய்முறை நடுவராகிய மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 110 கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த ஓராண்டு காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்களை கழித்து மீதமுள்ள 140 நாட்கள் பிணையில் வர முடியாத நிலையில் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து போலீசார் ரவுடி சான்பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: