பழைய தங்க குழிகள் பசுமை திரும்ப 10 ஆயிரம் மூங்கில் விதை பந்துகள் வீச்சு

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா கோல்டுமைன்ஸ் வனப்பகுதியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவின்பேரில், மூங்கில் விதைகள் பந்துகள் வீசப்பட்டது.

பந்தலூர் வனச்சரகம் தேவாலா கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் கூடலூர் மாவட்ட வன அலுவலர்  கொம்மு ஓம்கார் அறிவுறுத்தலின் படி  பந்தலூர் வனச்சரகம், தேவாலா பிரிவு, நாடுகாணி காவல் பகுதி, கோல்ட் மைன்ஸ் வனப்பகுதியில், பந்தலூர் வனச்சரக அலுவலர் ராம்குமார் தலைமையிலான வனப்பணியாளர்களால்  சுமார் 1000 எண்ணிக்கையிலான  மூங்கில் விதை பந்துகள் வீசப்பட்டது.

இதில் பந்தலூர் வனச்சரக பணியாளர்கள், பொதுமக்கள், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலத்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விதை பந்துகளை வீசினர்.

இம்முயற்சி பழைய தங்க குழிகளால்  பாதிப்படைந்த வனப்பகுதியில் பசுமை நிலைக்கு மாற்றி அமைக்கவும், வனப்பகுதியில் யானைகளுக்கு போதுமான உணவு பெறுவதற்கும் அதன் மூலம் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான மூங்கில் விதை பந்துகள் வீச முடிவு செய்யப்பட்டு அதன் முதற்கட்டமாக நேற்று  1000 விதை பந்துகள்  வீசப்பட்டது.

Related Stories: