சொல்லிட்டாங்க...

பொருளாதாரத்தில், கார்ப்பரேட்டை காப்பாற்ற வேண்டும் என்கிற வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜ அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

2014ல் மோடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றனர். மாறாக, பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துதான் ஒன்றிய அரசின் சாதனை.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

பேரறிவாளன் விடுதலையில் விமர்சிப்பதற்கு எதுவுமில்லை. 100 சதவீதம் சட்டப்பூர்வமாக அவர் விடுதலை அடைந்துள்ளார்.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: