குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பதவியேற்றதும் டோக்கியோ பறந்த ஆஸி. பிரதமர்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தான் பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியோ சென்றார். ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதால், முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடைந்தது. தற்போது அந்தோணி அல்பானீஸ் (59) நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். புதிய பிரதமர் பதவியேற்பு விழா, எவ்வித ஆடம்பரமுமின்றி சிம்பிளாக நடந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் உச்சி மாநாடு நடைபெறும் சற்றுமுன் ஆஸ்திரேலியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். நேற்றே அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், டோக்கியோ சென்றார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற அந்தோணி அல்பானீஸ், தான் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அவர் டோக்கியோவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது குழுவில், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கும் குவாட் உச்சிமாநாட்டிற்கு சென்றுள்ளார் என்று ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

Related Stories: