பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி

சென்னை,: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தமிழகபாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஒன்றிய அரசு குறைத்து இருக்கிறது. இதற்கு முன்பு நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு விலை குறைத்து இருக்கிறது. இந்த 6 மாத காலத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.14.50 ஆக குறைத்து

இருக்கிறது. அதேபோல் டீசல் விலையை ரூ.17 ஆக குறைத்து இருக்கிறார்கள். சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி சாதாரண மக்களுக்காக இதை செய்து கொண்டு இருக்கிறார். இரண்டாவது, 9 கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் ரூ.200 சிலிண்டருக்கு மானியம், அறிவித்து இருக்கிறார்.

எனவே, மாநில அரசு தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறைக்கவில்லை என்றால் பாஜ தொண்டர்கள் கோட்டையை முற்றுகையிட தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: