பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பெட்ரோல் லிட்டருக்கு ₹8, டீசல் லிட்டருக்கு ₹6 குறைத்திருப்பதும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு  இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு, தலா ₹200 மானியம்,  பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு,  கூடுதல் உர மானியம், சிமெ ண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அறிவிப்புக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை அறிந்து சரியான நேரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இந்திய பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசியலின் பன்முகத்தன்மை கொண்ட தலைமைப் பண்பால் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இது நீங்கள் தைரியமாக எடுக்கும் முடிவுகளால் தான் சாத்தியமாகி இருக்கிறது. ஒன்றிய அரசின் அறிவிப்புகளால் எழை, எளிய மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனடைவார்கள் என நம்புகிறேன். அதிமுக சார்பிலும், என் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: